“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் முழு அளவில் ஆதரிக்க நாம் தீர்மானித்துள்ளோம் .

கொள்கைகள் ஒன்றுபட்டு பல முக்கியமான விடயங்களை முன்வைத்து இருதரப்பும் இணங்கியுள்ளது . கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக உழைப்போம். தமிழர் பிரச்சினை உட்பட பல விடயங்களில் தீர்வு காணப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்போம். முற்போக்கு அரசியலில் இது ஒரு உத்வேகம். கோட்டாவின் வெற்றியை அமோக வெற்றியாக்குவோம் ..”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா எம் பி சற்று முன் கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

அதேவேளை  ஜனாதிபதி எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை. தாம் நடுநிலையாக இயஙக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்து உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS