கொழும்பில் இன்று நள்ளிரவு வேளையில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கொழும்பு -கோட்டை ரீகல் திரையரங்கிற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி உள்ளனர். திரையரங்கிற்கு அருகிலுள்ள அச்சிடும் நிலையத்தின் மேல் மாடியில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொண்டனர். தீ விபத்து காரணமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் முழுமையான சேத விபரங்கள் இன்னமும் மதிப்பிடவில்லை.
தீ விபத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை பொலிஸார் விசாரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது
Post a Comment