Breaking

Saturday, November 16, 2019

புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது

இன்று(16) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வேறு சில குற்றங்கள் தொடர்பில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages