-றிம்சி ஜலீல்-
பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைத்தவர் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், தித்தவல்கால பகுதியில் அன்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
காலியிலே பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச போக இருக்கின்ற விடயம் கேள்விப்பட்ட உடனேயே முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த விடயம் தொடர்பாக தெளிவாகக் கூறி இது முஸ்லீம் சமூகத்துக்கு பாதிப்பு அத்தோடு முஸ்லிம்கள் முழுமையாக உங்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற விடயத்தை நான் அவரிடம் தெளிவாக கூறினேன் அவர் தொலைபேசி மூலம் அழைத்து ரிசாத் பதியுதீன் உங்களை பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைக்க போகவேண்டாம் என்று கூறுகிறார் அதன் மூலம் முஸ்லிம் சமூகம் எங்களைப் புறக்கணிக்கும் என்றார் அதனால் நீங்கள் போகக்கூடாது என்று கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறினார்.
அதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நான் அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டேன் இனி யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் நான் அங்கு போய்தான் ஆகவேண்டும் என்று கூறிவிட்டு அங்கு போய் அந்த காரியாலயத்தை அவர் திறந்து வைத்தார் அண்ணன் ஜனாதிபதியாக இருக்கும் போது தம்பி அவருடைய பேச்சைக் கேட்கவில்லை
இப்பொழுது தம்பி ஜனாதிபதித் தேர்தலில் நிற்கிறார் அவர் ஜனாதிபதியாக வந்தால் யாருடைய பேச்சையும் கேட்டு நடக்க மாட்டார்
எனவே இந்த தேர்தலை யாரும் சாதாரண தேர்தலாக எடுத்து விடாதீர்கள் பிரதேச சபை தேர்தலை போல அல்லது மாகாணசபை தேர்தலை போல ஏன் பாராளுமன்ற தேர்தலை போல கூட நினைத்து விடாதீர்கள் இந்தத் தேர்தலில் தான் மதகுரு சொன்னதுபோல அவர்கள் நாற்பது ஐம்பது வருடங்களை கடத்தி விடுவார்கள் அத்தோடு இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியும் விடுவார்கள்.
எமக்கு இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாறு இருக்கிறது எங்களுடைய நிம்மதி சந்தோசமான வாழ்வை சிங்கள முஸ்லிம் தமிழ் என்று பாராது அருகருகே கிராமங்களில் நாங்கள் சந்தோசமாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வந்தோம் அண்மைக்காலமாக நச்சு விதைகள் விதைக்கப்பட்டிருக்கிறது இனவாத சிந்தனைகள் கிராமங்களுக்கு உள்ளேயும் கொண்டு போய் சேர்க்கப்பட்டதினாள்தான் அவர்கள் எங்கோ அடிக்க இங்கே வந்து அடிக்கிறார்கள்.
அடிப்பவர்களுக்கும் தெரியாது ஏன் அடிக்கிறோம் என்று அடி வாங்குகின்ற எங்களுக்கும் தெரியாது ஏன் வந்து பள்ளியை உடைக்கின்றார்கள் என்று சம்பவம் நடக்கின்றது எங்கேயோ ஆனால் இங்கே வந்து அடிக்கின்றார்கள் இவ்வாறான அரசியலுக்காக கேவலமான வேலைகளைச் செய்பவர்கள் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
இதனால்தான் ஒரு சில மதகுருமார்களை ஏவிவிட்டு இவ்வாறான கலவரங்களை தூண்டினார்கள் காலியில் பொதுபலசேனாவினுடைய காரியாலயத்தை திறந்து வைத்தவர் கோட்டாபய ராஜபக்ச அன்று ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு ஜனாதிபதியாக இருந்தார் நான் அமைச்சராக இருந்தேன் ஒரு அதிகாரிக்கு ஜனாதிபதியும் அமைச்சரும் கூறியும் கேட்கவில்லை என்றால் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த நாட்டை நாசமாக்கிய அவர்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.
இந்த நாட்டில் சிங்கள முஸ்லிம் தமிழ் கத்தோலிக்க பேர்கர் என்ற வேறுபாடின்றி நாம் அழகாக ஒற்றுமையோடு வாழ வேண்டியவர்கள் இனவாதிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் எமக்கு வேண்டாம் நாம் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள் சஹ்ரான் செய்த கீழ்த்தரமான செயல்களுக்கு நாம் விரோதமானவர்கள் அவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்றுதான் நமது முஸ்லிம் சமூகம் சொல்கின்றது.
நாம் தீவிரவாதத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதினால்தான் எம்மை வடக்கிலிருந்து விரட்டியடித்தார்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அன்று நாம் எமது ஊர்களிலேயே தங்கியிருக்கலாம் எனவே இந்தமுறை உங்களுடைய வாக்குகளை இனவாதிகளையும் இனவாதத்தையும் ஒழிப்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்
என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான நஸீர், பிரதேச சபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான இர்பான், அன்பஸ் அமால்டீன், சபீர், கொள்கை பரப்பு செயலாளர் இம்ரான் கான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment