Breaking

Saturday, November 02, 2019

தேசிய மட்டத்தில் கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த பாருக் பாத்திமா சப்னா.

கடந்த 27.10.2019 அன்று கொழும்பில் நடைபெற்ற தேசிய மீலாத் கவிதை போட்டியில் கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட அ/கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முதலாம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தரம் 11 இல் கல்வி கற்கும் பாருக் பாத்திமா சப்னா எனும் மாணவியே குறித்த போட்டியில் பங்கு பற்றி அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்று தனது பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். குறித்த மாணவி சென்ற வருடம் நடைபெற்ற தேசிய மீலாத் கவிதை போட்டியில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஹோராப்பொலயை வசிப்பிடமாக கொண்ட குறித்த மாணவி பாருக், அஜீரா தம்பதிகளின் புதல்வியாவார். சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்த சப்னா பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் ஆகிவற்றில் தனது படைப்புக்களை பகிர்ந்து தனக்கான ஓர் வாசகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages