அப்போது இனித்த ஹக்கீம் றிஷாட் இப்போது கசப்பது ஏன்???
மதுவருந்திய காடயர்களால் முஸ்லிம்கள் அடிவாங்கும் போது!
கேடுகெட்ட வார்த்தைகளால் ஒட்டு மொத்த முஸ்லீம்களின் மனங்களும் புன்படுத்தப்பட்ட போது!
எல்லாம் வல்ல இறைவனை தூற்றி வணக்கஸ்தளங்கள் கற்களால் எறிந்து நொறுக்கப்பட்ட போது!
கோடிக்கணக்கான நம் சகோதரர்களின் சொத்துக்கள், வியாபாரங்கள் தீயிட்டு கொழுத்தி நாசம்செய்யப்பட்ட போது!
ஹலாலான உணவுக்கு எதிர்ப்பு வந்த போது!
பல அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்ட போது!
இந்த சமூகமே அழுது புலம்பியது... இந்த அநியாயங்கள் நடந்ததை வேடிக்கை பார்த்த அரசை விட்டு அகலுமாறு ஒன்றுபட்டு கூறியது!
விசுவாசமா! மக்களா! என்ற ஒரு நிர்பந்த நிலைமை வந்த போது!
கடைசியில் மக்களின் முடிவுக்குத்தானே நமது சமூகம் அங்கீகரித்த தலைவர்கள் வந்தார்கள்!
நடந்த அநியாயங்களை பாராளுமன்றிலே கத்தினார்கள்! அநியாயம் நடந்த இடங்களுக்கு நேரகாலம் பாராது சென்றார்கள்! பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்!
இந்த சமூகத்திற்கு அநியாயங்கள் நடந்த போது தைரியமாக தட்டிக்கேற்கும் தலைவர்கள் றிஷாட் ஹக்கீமென்று தலையில் வைத்து கொண்டாடினீர்கள்?
இப்போது உங்களுக்கு என்ன நடந்தது???
ஒரு தேர்தல் தோல்வியை வைத்து பச்சோந்திகள் போல் பேசுகிறீர்கள???
இந்த சமூகத்திற்கு அநியாங்கள்,அட்டூழியங்கள் நடந்த போது சமூகத்தின் சொல்லுக்கு செவிசாய்க்காது சமூகத்தை விட விசுவாசமே பெரிதென தங்கள் மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு! என் முடிவுதான் சரியானது! உங்கள் சொல்லை கேட்கமுடியாதென்றிருந்த திமிர் பிடித்த பிடிவாத மாற்று கட்சி விசுவாசிகளுக்கு இப்போது ஜால்ரா போடுகிறீர்களா? என்ன டிஸைன் முஸ்லிம் சமூகமடா நீங்கள்???
ஒன்றும் நடக்காமல் வெறுமனேவா சமூகத்திற்காக ஹக்கீம், றிஷாத் கத்தினார்கள்???
ஒரு நாய்கூட தனக்கு ஒருவன் கல்லால் அடித்தால் ஓடிப்போய் தூரத்தில் நின்றாவது குரைக்கும்!!!
அவ்வாறு அடித்தபோதுதானே நாட்டின் உயர்சபையிலே இந்த சமூகத்திற்காக கத்தினார்கள்!
அவ்வாறு கத்தியது உங்கள் பார்வையில் இனவாதமாக தெரிவது! என்ன நாய்க்குகூட இல்லாத ஞாயம்???
வேற்றுக்கட்சி வெறுப்பின் காரணமாக! ஒரு தேர்தலில் வென்ற பிறகு பலநாள் ஆதரளவாளர்களின் மன அழுத்தத்தின் விமர்சன வெளிப்பாடு அது அந்த கட்சியை பரம்பரையாக விசுவாசம் கொண்டோரிடமிருந்து வெளியாகுவது இயல்பானது!
பங்காளி கட்சிகளாக வந்தவர்களால் பரம்பரையாக இருந்த எங்களுக்கு பந்தி கிடைப்பதில்லையென்ற ஞாயம் பேசப்படுவது தங்களுடைய ஆளுமை அரசியலில் ஏற்பட்ட நித்திரைகளே காரணமே தவிர பங்காளிகளில் பழி போடுவது சிறுபிள்ளைத்தனமானது!
அவ்வாறான பரம்பரை அரசியல்காரர்கள் தங்கள் பலகால அரசியல் ஆளுமையால் சக பங்காளிகளை வீழ்த்த முடியாமல் தங்களுக்கு சந்தர்பமமொன்று கிடைத்தவுடன்! முதல் வேலையாக பச்சைப் பகைவனென்றும் பாராமல் அவனையும் சேர்த்துக் கொண்டு ஒரேயின பங்காளிகளை பலியெடுக்க பஞ்சதந்திரம் போடுகிறார்கள்! இதைவிட ஒரு இயலாமை சதிச்செயல் உலகில் இருக்கமுடியாது!
இந்த சமூகம் அடிபட்ட போதும்,கதறிய போதும்! வெளிப்படையாக பகிரங்கமாக தட்டிக்கேட்டவர்களை ஓடிபோய் ஆறுதளித்தவர்களை, ஊடகங்களில் குரல் கொடுத்தவர்களை ஒதுக்கிவிட்டும் ச
பேசமுடியாது...
தொடரும்...
No comments:
Post a Comment