Breaking

Sunday, November 17, 2019

இம்முறை சட்டபூர்வமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்தது.


2010 ஆம், 2015 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை சட்டபூர்வமான முறையில்
ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்ததாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாவ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் தமது அமைப்பைச் சேர்ந்த 2 ஆயிரத்து 200 ற்கு மேற்பட்ட பிரதிநிதிகளை ஈடுபடுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் வகையில் நடைபெற்ற மிகச்சிறப்பான ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும் என்று கெஃபே அமைப்பின் ஊடகப் பணிப்பாளர் அரவிந்த இந்திரஜித் இதன் பொது தெரிவித்தார்.

இதற்காக அரசியல் கட்சிகள் சிறந்த பங்களிப்பை நல்கியிருந்தன. எனினும் சமூக ஊடக செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages