Breaking

Sunday, November 17, 2019

புதிய ஜனாதிபதி நாளை காலை பதவி பிரமாணம்


இலங்கையின் 7வது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ நாளை காலை 11 மணிக்கு அனுராதபுரம் றுவன்வெலிசாயவில் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
இலங்கை ஜனாநாயக சோசலிஷ குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை அறிவித்துள்ளார்.
நேற்று (16) நடந்து முடிந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இன்று வௌியிடப்பட்டன.
பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 6,924,255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 (இது 41.99 சதவீத) வாக்குகளைப் பெற்றார்.

No comments:

Post a Comment

Pages