யூடிவின் தொகுப்பாளரும், தயாரிப்பாளருமான சகோதரர் பிஸ்ரினுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இன்று பொன்னாடை அணிவித்து கௌரவமளித்தது.
கடந்த அரச தொலைக்காட்சி விருது விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுக் கொண்டமைக்காகவே போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பிஸ்ரினுக்கு இந்த கௌரவத்தை வழங்கியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த கௌரவ்விப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் பிஸ்ரின் குறித்த தினத்தில் வெளிநாடு பயணமாகி இருந்ததால் இன்று நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
யூடிவின் நடப்பு விவகாரம் மற்றும் அரசியல் துறைக்கான பிரதானியாக யூடிவியில் பிஸ்ரின் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் இன்னும் பல வெற்றிகளை பெற kekirawa News இன் வாழ்த்துகள்.
0 Comments