Breaking

Tuesday, March 10, 2020

நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் படுகொலை விவகாரத்தில் 6 பேர் சட்டத்தரணிகள் ஊடாக போலீசில் சரண்.

நீர்கொழும்பு அன்சார்  ஹோட்டலில்  ஊழியர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 6 பேர்  சட்டத்தரணிகள் ஊடாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்த பின்னர் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில்

இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Pages