வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது .
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன .இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன் நூற்றுக்கு மேற்பட்ட பொதுக்கள் ஒன்றிணைந்தனர்.
இதனையடுத்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலை முன் வந்தடைந்து வைத்தியசாலைக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்திலும் இந்த தடுப்பு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் இடம்பெற்றது.
0 Comments