ஹஸ்பர் ஏ ஹலீம்

கொரோனா என்கின்ற போர்வையில் பற்றி கலோ கெம்பஸை அபகரிக்க முற்படுகிறார்கள்.இது கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளை பரித்தெடுக்கும் முயற்சியாகும் என முன்னால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் (14) மாலை இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட  கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது முன்னால் அமைச்சர் றிசாட் பதியுதீன் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில் இன்னும் இரண்டு,மூன்று மாதங்களில் பற்றிகலோ கெம்பஸ் இரானுவ பயிற்சி முகமாக மாறும் .முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தப்போகிறார்கள் கடந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற முடியாத நிலையில் முஸ்லிம் விவாக சட்டத்தை கொண்டு வந்து சிங்கள இன மக்கள் மத்தியில் துவேசங்களை விதைக்கப் பார்த்த அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர்களிடம் மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால் எமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

மத அனுஷ்டானங்களை உரிமைகளோடும் அறபி மொழியை தொழுகையை ,நிறைவேற்றுவதற்கு தங்கு தடையின்றி செய்ய வேண்டும் இதனை யாராலும் அடக்க முடியாது ஆங்கிலேயர்களால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் விவாக சட்டத்தை இவர்களால் குழப்ப முற்படுவது சமூகத்தின் மீதான அடக்கு முறையை கொண்டுள்ளது.எமது சமூகத்தின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டும்  இருப்பை கேள்விக்குறியாக்க நினைப்பவர்களுக்கு இம் முறை தேர்தலில் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ வாக்களிக்க வேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS