கொழும்பு கடற்படை தலைமையக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு எலிக் காய்ச்சல்தான் காரணம் என்று கடற்படை அறிவித்துள்ளது.
இவர் கடந்த 18 ஆம் திகதி நோய் நிலை காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் வைத்தியர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கடற்படை தலைமையக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய அலுவலகரே நேற்று உயிரிழந்தார்.
எனினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கடற்படை அலுவலகரை கோவிட் – 19 நோயாளியின் சடலத்தை தகனம் செய்யும் முறைப்படி அவரது சடலத்தையும் தகனம் செய்யுமாறு சட்ட மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS