எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வேறு கட்சியில் இணைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்தும் பதவிகளில் இருந்தும் நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS