ஐக்கிய தேசிய முன்னனி அமைக்க உள்ள ஜனநாயக கூட்டணி தலைமைத்துவ சபைக்கு ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவை உள்வாங்கும் யோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று(01) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது அதற்கு குறித்த கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் அரசியல் நிரல்களுக்கு அமைய சதுர சேனாரத்ன கட்சி மாற்றங்களில் ஈடுபடுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
إرسال تعليق