Breaking

Tuesday, April 28, 2020

பெங்களூரில் உள்ள மாணவர்கள் இன்று இலங்கைக்கு

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் 124 இலங்கை மாணவர்களை இன்று (28) மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று இந்தியாவின் பெங்களூருக்கு ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களும் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களும் கடந்த வாரங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Pages