தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று(28) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம், ராஜகிரிய தேர்தல்கள் செயலகம் என்பவற்றுக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கையளிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விண்ணப்பங்களை கையளிப்பதற்காக வேறு தினம் வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS