நூருல் ஹுதா உமர்.

கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்
(21) நாளை பிற்பகல் மூன்று மணியளவில் வெகு விமர்சையாக  பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண  கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எம்.டி.எ. நிஸாம் அவர்கள் கலந்து கொள்ள உள்ளதுடன். கௌரவ அதிதிகளாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல், கல்வியமைச்சின் திட்டப்பணிப்பாளர் கே. பத்மநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 மேலும் அரச காரியால பிரதானிகள், கல்வி உயர் அதிகாரிகள் என பலரும் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விளையாட்டு போட்டியின் ஊடகவியலாளர்களுக்கான  உத்தியோகபூர்வ மேலங்கி வழங்கும் நிகழ்வு இன்று (20) மாலை கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் பங்குபற்றலுடன் அதிபர் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

இவ் அறிமுக விழா நிகழ்வில் ஈ-ஸாஹிரா மற்றும் பாடசாலை ஊடக பொறுப்பதிகாரி சஃபி எச்.இஸ்மாயில், விளையாட்டு ஆசிரியர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS