தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,

கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை சார்ந்தவர்களால், தற்பொழுது அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் உறுதியாக நீக்கப்படலாம் என்று தீர்க்கமாக அறிவிக்கப்படும் வரை, பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய திகதியானது அறிவிக்கப்படக் கூடாதென்று கோருகின்றேன்.

இந்நிலையில் சகல அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் தேர்தல் திகதி தொடர்பில் கலந்துரையாடி, சிறந்த முடிவுகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டுவதோடு, அதுவரையில் தேர்தலுக்கான அறிவிப்பு திகதியை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறு அவர் தனது கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS