ஏப்ரல் மாதம் 4ம் திகதியிட்டு அரச மருத்துவர் சங்கம் தயாரித்துள்ள கொரோனா சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான திட்ட வரைபு (GMOA/ICTA COVID-19 Exit strategy – Sri Lanka) முஸ்லிம் சமூகத்தைக் களங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம். 

என பெயரிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில், தொடர்பற்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்தினை பிரத்யேகமாக உள்ளடக்கியுள்ளமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அரச மருத்துவர் சங்கம் இதற்கான பூரண விளக்கத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இனவாதத்தை விதைப்பதற்கான தெளிவான முயற்சியாகவே இதைத் தாம் கணிப்பதாகவும் முஸ்லிம் சமூகத்தைக் களங்கப்படுத்தும் இவ்வறிக்கை தொடர்பில் விளக்கம் தரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS