குருணாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்குள் 10 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமேல் மாகாண இணைப்பாளர் டொக்டர் இந்திக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவாகிய நோய்த் தொற்றாளிகளில் பலர் படையினர் எனவும் அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு நபர்களுடன் தொடர்பு பேணியுள்ளதாகவும் இது ஓர் பாரதூரமான நிலைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment