கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டபின்னர் கொழும்பு, மட்டக்குளிய மோதரை “மெத் சாந்த செவன” மாடிக்குடியிருப்பில் 1200 பொதுமக்கள் சுயதனிமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த குடியிருப்பில் இன்று கொரோனா தொற்றாளி கண்டறியப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராஜகிரிய பண்டரநாயக்கபுர, கொலன்னாவ கண்டி கொலபஸ்ஸ உட்பட்ட இடங்களில் இருந்து மொத்தமாக 137 பேர் இன்று மாத்திரம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
إرسال تعليق