தம்புள்ளையில் உயிரிழந்த இராணுவ வீரரின் மரணத்துக்கான காரணத்தை மரண பரிசோதனையின் பின்னரே தெரிவிக்க முடியும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
தம்புள்ளையில் உயிரிழந்த இராணுவ வீரரின் மரணம் குறித்த தகவல்களைக் கோரிய போதே, அவர் க்கு இதனைத் தெரிவித்தார்.
உயிரிழந்த இராணுவ வீரர் சிவில் உடையில் காணப்படுவது ஏன் என வினவிய போது, அவர் வேறொரு இராணுவ முகாமுக்குச் சென்று, தனது முகாமுக்குத் திரும்பும் போதே உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.
குறித்த இராணுவ வீரர் நேற்று (04) தம்புள்ளை பஸ் நிலையத்தில் சுகவீனமுற்று விழுந்து அரை மணி நேரமாகியும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எவரும் முன்வரவில்லை எனத் தெரியவருகின்றது.
பின்னர், ஒரு குழுவினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தாலும், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
إرسال تعليق