(Bishrin Mohamed ) 

ஊடகத்துறையில் பணிபுரிவதற்கு ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு கல்வித் தகைமையும் இதற்கு தேவையில்லை என்பதுதான்.

அந்த விளம்பரத்தைப் பார்க்கும் போது ரொம்பவே கவலையாக இருக்கிறது. ஊடகத்துறை என்பது சர்வதேச மட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற ஒரு துறையாக இருந்தாலும் கூட இலங்கையில் இன்று யார் வேண்டுமானாலும் ஊடகவியலாளர் ஆகிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மொழி திறமையோ அல்லது துறைசார்ந்து கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை கேமராவை, பேனாவை எடுத்தவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் ஆகிவிடலாம் என்ற ஒரு மன பிரம்மைஉருவாகி இருக்கின்றது.

இந்த மனோநிலையில் தான் அந்த செய்தி இணையத்தளம் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கின்றது.

குறிப்பாக இந்த காலப்பகுதியில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறியுள்ளது.

இலங்கை தமிழ் ஊடகத்துறை என்பது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது . ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் ஊடகவியலாளர் ஆகிவிடலாம் என்ற ஒரு நிலை வந்திருப்பது மிக கவலையளிக்கின்றது.

ஊடகத்துறை என்பது உலகின் மிகப்பெரிய சக்தியாக இருக்கின்றது அந்த சக்தியை இலங்கையில் இருக்கின்றவர்கள் ஏன் இவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள்.

பிரஜைகள் ஊடகவியல் (citizen journalism)என்பது இன்று உலகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது
ஆனால் தொழில்சார் ஊடகவியல் (professional journalism)என்பது அது ஒரு தனியான துறை இந்த துறை சம்பந்தமாக ஆழமாக கற்று அது சார்ந்து பல வருடங்கள் பயிற்சி பெற்ற எத்தனையோ ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருக்கின்ற நிலையில் இன்று சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னர் யார் வேண்டுமானாலும் ஊடகவியலாளர் ஆகிவிடலாம் என்ற நிலை

ஓர் ஊடக அடையாள அட்டையை உருவாக்கிக் கொண்டால் ஊடகவியலாளர்கள் ஆகிவிடலாம் என்ற
மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகம் இருக்கின்றது. ஆனால் இந்த துறை சார்ந்து எந்த ஒரு அனுபவம் இல்லாத அது சார்ந்த எந்த ஒரு அறிவு பின்புலமும் இல்லாதவர்கள் செய்த நடவடிக்கைகளால் COVID காலப்பகுதியில் இந்த நாட்டிலே என்ன மாதிரியான நிலைகள் உருவாகின என்பது எல்லோரும்
அறிந்த விடையமே.

ஊடக துறையில் கற்று தேர்ந்து அனுபவம் மிக்க நிறைய பேர் நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் அவர்களது பணியை செய்வார்கள் அதற்கான இடத்தை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS