கைதாகி விளக்கமறியலி வைக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக போகம்பறை சிறைச்சாலையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பூசா மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலேயே தற்பாது கைதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த வாரம் முதல் கைதிகளை தனிமைப்படுத்தப்படுத்துவதற்கான முகாமாக போகம்பறை சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அங்கு 500 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 21 நாட்களின் பின்னர், நீதிமன்றம் உத்தரவிட்ட சிறைச்சாலைகளில தடுத்து வைக்கப்படவுள்ளனர்.
إرسال تعليق