பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும்  ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு  உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய  நீதியரசர்கள்  புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட  ஆகியோர் இந்த நீதிபதிகள் குறித்த விசாரணை குழாமில் அடங்குகின்றனர்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS