அரச செலவீனங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் தனக்குள்ளதை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிரூபிக்கவேண்டும் என முன்னாள நிதியமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள புதிய கடிதத்தில் அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்
ஏப்ரல் 30 ம் திகதி முதல் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் நாள் வரைஅரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு புறம்பாக அரசசேவைகளுக்காக ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை பெறுவதற்கோ செலவிடுவதற்கோ உரிய அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் ஏற்பாடுகள் அரசமைப்பில் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஏப்ரல் 30 ம் திகதி முதல் நாடாளுமன்றம் கூட்டப்படும் காலம் வரையான காலப்பகுதிக்குள் அரச நிதியை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றத்தினால் மாத்திரம் வழங்கமுடியும் என முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ள்ளார்.
அரசமைப்பின் 148 வது சரத்திற்கு அமைய அரசநிதி தொடர்பிலான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்
Post a Comment