உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை விடுதலை செய்ய கோரி அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கௌரி தவராசா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பாளர், குற்றப்புலனாய்வு துறையின் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 14ஆம் திகதியன்று சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்தமைக்கான காரணம் கூறப்படவில்லை.
அத்துடன் அவரை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் இந்த கைது உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் தொடர்பிலேயே மேற்கொள்ளப்பட்டது என்று கூறினாலும் தமது கட்சிக்காரருக்கு அந்த தாக்குதல்களுடன் தொடர்புகள் இல்லை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்தமை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர் தமது கட்சிக்காரரை உரிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
Post a Comment