கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 34 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 552 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 941 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 880 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
إرسال تعليق