கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுருந்ததன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்று (08) காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புகையிரநிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS