அளுத்கமை தர்ஹா நகர் சோதனை சாவடியில் வைத்து ஒட்டிசம் குணம் கொண்ட 14 வயது சிறுவனை காவல்துறையினர் சித்திரவதை செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிக்கோரப்பட்டுள்ளது.
தாரிக் அஹமட் என்ற இந்த சிறுவன் சோதனை சாவடி ஒன்றில் வைத்து கடந்த மே 25ஆம் திகதியன்று தாக்கப்பட்டுள்ளார்.
இவர் ஊரடங்கு வேளை என்று அறியாத நிலையில் தமது தந்தையாரின் ஈருளியில் சோதனை சாவடி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தாக்கியதாக சிறுவனின் தந்தையார் காவல்துறையில் முறையிட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறுவனின் தந்தையார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரiணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த விடயத்தில் நீதிவேண்டும் என்று அரசியல்வாதிகள், சிவில் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷாகிர் மௌலானா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குருநாதன் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS