(றிஸ்கான் முகம்மட்)
கலாநிதி வி ஜனகன், கல்வி முகாமைத்துவத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலான பின்னணியைக் கொண்ட ஒரு லட்சிய மற்றும் இலக்கு சார்ந்த தொழில்முனைவோர். அவர் “தனிமை நிவாரணத் திட்டத்தின்” கீழ் 1,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் மாணவர்கள் தங்கள் எதிர்கால முயற்சிகளை பெரிதும் ஆதரிக்கக்கூடிய தொழிற்பயிற்சி உட்பட ஏராளமான கல்வித் துறைகளைத் தொடர அனுமதிக்கிறது.
COVID-19 ஆனது பல நாடுகளின் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தற்பொழுது கடுமையான குறுகிய கால இடையூறு உலகெங்கிலும் உள்ள பல குடும்பங்களால் உணரப்படுகிறது: வீட்டுப் பள்ளிப்படிப்பு மற்றும் மாணவர் வாழ்க்கை இழப்பு ஆகியவை மாணவர்களின் உற்பத்தித்திறனுக்கு பெரும் சவாலாக அமைந்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடருவதற்கான ஆதரவை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தொற்றுநோய் சோதனைக்கு உட்படுத்தக்கூடியதும் நிச்சயமற்ற தன்மையையும் கொண்ட ஒரு புதிய கல்வி அலைகளை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இந்த குறுக்கீடுகள் ஒரு குறுகிய கால பிரச்சினை மட்டுமன்றி, ஒரு நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் மேலும் சமத்துவமின்மையையும் அதிகரிக்கக்கூடும்.
சில மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரிடமிருந்தும் பணியிடத்திலிருந்தும் கிடைக்கப்பெறும் வருமானம் தான் அவர்களின் கல்விச் செலவுகளை ஈடுகட்ட முக்கிய ஆதாரமாக இருந்தது என்பதை கலாநிதி வி ஜனகன் அறிவார். இது நாடு முழுவதும் பரவியிருக்கும் கோவிட் 19 நெருக்கடியால் ஒரு பெரிய அளவிற்கு கேள்விக்குறியாகிவிட்டது.
IDM Nations Campus மற்றும் ஜனகன் அறக்கட்டளை ஆகியவற்றால் மாணவர்களின் தொடர்ச்சியான கல்வி முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளார் கலாநிதி வி ஜனகன். ஒரு சமூக ஆர்வலராக, ஜனகன் அறக்கட்டளையின் மூலம் பல சமூக உதவி முயற்சிகளை அவர் செய்துள்ளார் மற்றும் பாராட்டத்தக்க சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புலமைப்பரிசில் திட்டமானது குறிப்பாக COVID-19 விளைவுகளை நிவர்த்தி செய்வதற்காகவும் சந்தேகத்திற்கு இடமின்றி பல வறிய மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடனும் அமைந்துள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டம், வழக்கமான நிர்வாக செயல்முறை சிக்கல்கள் அல்லாது விண்ணப்பிக்க மிகவும் எளிதானவை. மேலும், புலமைப்பரிசில் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் தங்களது தகுதியையும் அதைப் பெறுவதற்கான ஆர்வத்தையும் சரிபார்க்க ஒரு தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கலாநிதி வி ஜனகன் கூறுகையில், அவரது பின்னணி ஒரு பார்வையாளராக இருப்பதைத் தாண்டி ஒரு ஆர்வமுள்ள தனிநபராக அவரை நகர்த்தியுள்ளது, மேலும் அவரை தேசிய நலன்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் வலுவான விசுவாசியாக மாற்றியுள்ளது மற்றும் ஒரு ஈடுபாட்டுடன் கூடிய ஜனநாயகத்தின் மூலம் தான் ஒரு வெற்றிகரமான நாடு இயங்க முடியும் என்ற நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது. அரசியலமைப்பு விழுமியங்கள், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் உறுதியுள்ள தனிநபர் என்ற முறையில், சமூக சிந்தனையாளராக இடர் காலங்களில் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதன் மூலம் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Post a Comment