வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு  ஜனாதிபதி இன்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  
கொவிட் 19 தடுப்பு செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரின் குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னதாக PCR பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை தனியாக ஓரிடத்தில் வைப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS