எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராக உயர்தர பரீட்சையின் விடைத்தால் திருத்தப் பணிகளை மூன்று கட்டங்களாக முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதல்கட்ட திருத்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் கட்ட பணிகள் செப்டம்பர் 15 முதல் ஒக்டோபர் 01 ஆம் திகதி வரையிலும், மூன்றாம் கட்ட பணிகள் செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 8ம் திகதி வரையிலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விடைத்தாள் முதற்கட்ட திருத்தப் பணிகளுக்காக 12 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இதற்காக 8 ஆயிரத்து 466 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment