அரசுடன் இணைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற குழுவானது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தனித் தனியாக தீர்மானங்கள் எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
பௌசி இது தொடர்பில் தெரிவிக்கையில் தனக்கு ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சியுடன் தனக்கு எதிர்வரும் காலங்களில் அரசியல் பயணங்கள் இல்ல என தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்; “நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக 45 வருடங்கள் சேவை செய்தேன்… நான் மத்திய கொழும்பின் ஆசன அமைப்பாளராகவும் இருந்தேன்… மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி எனது ஆசனத் தொகுதியின் அரைவாசியினை பைசர் முஸ்தபாவிற்கு கொடுஹ்தார்… அதற்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மிகுதி அரைவாசியையும் அவருக்கே கொடுத்தார்.. நான் குழுவினை மீறி நடவடிக்கை எடுக்க மாட்டேன் எனது அரசியல் தீர்மானத்தினை எடுக்க வேண்டிய தருணம் இது…” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்களின் படி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் ஒரு சிலர் இணையும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
إرسال تعليق