முன்னாள் கடற்படைத் தளபதி, ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திலும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக மார்ஷல் ஒப் த எயார் போஸ் தரத்திலும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
2009 மே மாதத்தில் முடிவடைந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது தேசத்திற்கு வழங்கப்பட்ட துணிச்சலான சேவை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS