ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் நிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்றையதினம், அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கட்சிக்குள் இருந்த அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவரை கட்சியின் மத்திய செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
إرسال تعليق