
இலங்கையின் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி , அதன் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசாவை நவம்பர் 16 தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக சற்றுமுன்னர் அறிவித்தது.
இன்று பிற்பகல் 3.30 மணி முதல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய செயற்குழு இந்த முடிவை ஏகமனதாக எடுத்தது.
தேர்தலில் முன்வைக்கப்பட வேண்டிய கொள்கைகளை இங்கு பிரதமர் ரணில் விளக்கினார்.அந்த கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனைவரும் கூட்டாக செயற்பட வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சி பிளவுபடாமல் இருக்க இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் ரணில் இங்கு தெரிவித்தார்.
வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதா, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசரின் மகன் ஆவார்.
إرسال تعليق