(A.L.A.சிறாஜ்)
2019 ம் ஆண்டின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எட்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு (152) மேல் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 40 மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 08 மாணவர்கள் (20%) பெற்று சாதனை படைத்துள்ளனர். 70 புள்ளிகளுக்கு மேல் 33 மாணவர்கள் (82.5%) பெற்று சித்தயடைந்துள்ளனர்.
இதற்கு உறுதுணையாக செயற்பட்ட வித்தியாலய முதல்வர் ஜனாப் A.C ஆதம் அலி அவர்களுக்கும்,பொறுப்பான ஆசிரியை திருமதி FM. அறபாத் அவர்களுக்கும் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் J.M.அஸ்ஹர் உற்பட உறுப்பினர்களுக்கும், சித்தியடைந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் MIM. அப்பாஸ் (நளீமி) அவர்களுக்கும், இம்மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடாத்திய ஆசிரியர் AW. இப்ராஹிம் அவர்களுக்கும் இம்மாணவர்களுக்கு ஆரம்ப வகுப்புகளில் கற்பித்த ஏனைய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
Post a Comment