Breaking

Saturday, November 16, 2019

வாக்களிக்கச் செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்

காலி – நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம. காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த சமபவம் தொடர்பாக தற்போது எவரும் கைது செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages