இன்று நாம் இன மத பேதங்கள் மறந்து நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நாட்டுப்பற்றுடனும் நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்
என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எம். எச்.ஏ. ஹலீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 1948 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் நான்காம் திகதி எமது இலங்கைத் திருநாடு
பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்தது. இத்தித்தினத்தில் சுதந்திர இலங்கையின் அரசியமைப்புச் சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து ஜனநாயக நாடாக
உருவெடுத்த இலங்கைரூபவ் ஒரு இறையாண்மை கொண்ட நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக எமது மூத்த தலைவர்கள். இனம், மதம்ரூபவ் மொழி, சாதி என்ற எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி
போராடி வெற்றியை பெற்றுத் தந்தனர்.
குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய எமது
முன்னோர்களான ரீரூபவ் பி. ஜாயாரூபவ் சேர் ராசிக் பரீத் ரூபவ் அறிஞர் சித்திலெப்பை போன்றவர்களின் முன் மாதரிகளைக் கடைப்பிடித்து நாட்டிற்காக தம்மை அர்ப்பிணத்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
ஒரு நாட்டின் அபிவிருத்தியும் செழிப்பும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலுமே தங்கியிருக்கிறது. எனவே நாம் இன மத பேதங்கள் மறந்து நாட்டில் ஐக்கியத்தையும்
ஒற்றுமையையும் நாட்டுப் பற்றையும் கட்டி எழுப்புவோம் என்று முன்னாள் அமைச்சர்
ஹலீம் மேலும் தெரிவித்தார்.
إرسال تعليق