தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு

நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

பட்டம் அல்லது டிப்ளோமா

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பட்டப் படிப்பொன்றை அல்லது டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதி பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

3 வருடத்திற்குள் தொழிலற்றவர்- வயதெல்லை 35

அத்தினத்திற்கு 35 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் மேற்படி திகதிக்கு கிட்டிய மூன்று வருடக் காலப்பகுதியில் தொழில் ஒன்றில் ஈடுபடாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சான்றிதழை உறுதிப்படுத்தல்

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு சான்றிதழின் புகைப்படப் பிரதி ஒன்று (மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி) அனுப்ப வேண்டும்.


விண்ணப்ப முடிவுத் திகதி

2020.02.14ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.


ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் சேவை

இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையின் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.


விண்ணப்பப்படிவம்

விண்ணப்பங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் www.presidentsoffice.lk இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

விண்ணப்பம்  அனுப்ப வேண்டி முகவரி

PLACEMENT OF UNEMPLOYED GRADUATES AND DIPLOMA HOLDERS - 2020
PERSONNEL MANAGEMENT AND COORDINATION DIVISION,
PRESIDENTIAL SECRETARIAT,

COLOMBO - 01

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு - 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடித உறையின் இடது மூலையில்

கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரி/ (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் நிராகரிப்பு

குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தொழில் பிரிவுகள்

தெரிவு செய்யப்படுபவர்கள் 
  • கல்வி அமைச்சு (கிராமிய தோட்டப் பாடசாலைகள்)
  • நீர்ப்பாசன திணைக்களம்
  • கமநல சேவைகள் திணைக்களம்
  • வன ஜீவராசிகள் திணைக்களம்
  • சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களம்
  • சுகாதார அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் / மருத்துவ நிலையங்கள்) 
  • நில அளவை திணைக்களம்
  • விவசாய திணைக்களம்
  • சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம்
  • விலைமதிப்புத் திணைக்களம் 
  • குடிவரவு குடியகல்வு திணைக்களம் 
ஆகிய துறைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.

பயிற்சியில் ரூ. 20,000 கொடுப்பனவு

ஒரு வருட பயிற்சிக் காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். நியமனங்கள் மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும்.

5 வருடம் ஒரே மாவட்டத்தில் சேவை கட்டாயம்

முதலாவது நியமனம் வழங்கப்படும் மாவட்டத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்வது கட்டாயமானதாகும்.
Application | விண்ணப்பம்

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS