Breaking

Wednesday, June 03, 2020

அரச ஊழியர்கள் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு

அனைத்து அரச ஊழியர்களும் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளைய தினம்(04) அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அரச ஊழியர்களில் மூன்றில் ஒருபகுதியினர் மாத்திரமே பணியிடங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ரயில் மற்றும் பேரூந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages