அக்குறணையில் கொரொனா தொற்றுக்கு உள்ளானவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து  அக்குறணை முடக்கப்பட்டுள்ள நிலையில் கெக்கிராவை கதுருவளை  இன்னும் ஒரு சில நகரங்களிலுள்ள முஸ்லிம் கடைகள் யாவும் மூடி முடக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்ட சமயத்தில் அவர் செயலாளருடன் உரையாடியதாகவும் அதேவேளையில் சஜித் பிரேமதாசவுடன்  கவனத்திற் கொண்டு வந்து போது அவர் ஊடாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் பேசிய போது இந்த குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து உடன்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசர் லலித் வீரதுங்க  ஆகிய இருவரும் உறுதிமொழி வழங்கியுள்ளதாக என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில்  ஜனாதிபதியுடன் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு  கொண்ட போது  ஜனாதிபதியின் செயலாளர் உரையாடிய சந்தர்ப்பத்திலும் மற்றும் சஜித் பிரேமதாசவுடன்  கவனத்திற் கொண்டு வந்து போது அவர் ஊடாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் பேசிய போது இருவரும்  இவ்வாறு இதனை குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இன்று காலை 6.00 மணிக்கு ஊரடங்கு தளர்ப்பட்டு மீண்டும் 2.00 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நேரத்தில் கெக்கிராவை  கதுருவளை  நகரங்களிலுள்ள  சிங்கள , தமிழ் கடைகளைத் தவிர முஸ்லிம் கடைகளை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு மூடி முடக்கி விடப்பட்டுள்ளன.  

இதன் காரணமாக அன்றாடம் மரக்கறி, மீன் வியாபாரம் செய்யும் அத்தியாவசியப் பொருட்கள்  விற்பனை செய்யும் வர்த்தகர்கள் எல்லோரும் பெரும் பாதிப்படைந்துள்ளார்கள். 

எனவே இதன் மர்மம் என்ன ? இதன் உண்மை நிலையை பிராந்திய சுகாதார திணைக்களத்தின் மூலமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் கவனத்திற் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உண்மையிலேயே கெக்கிராவை, கதுருவளை இன்னும் சில  இடங்களில் அக்குறணை மற்றும் புற நகர பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக வியாபாரம் செய்து  வருகின்றனர். 

எனினும் அக்குறணையில் ஒரே ஒரு நபர் அடையாளம் காணப்பட்டதையிட்டு எங்கேயுள்ள  நகரங்களிலுள்ள  முஸ்லிம் கடைகளை மூடு முடக்கி விடுமாறு விடுக்கப்பட்ட அறிவுறத்தலின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் கனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று இந்த வர்த்தக நிலையங்கள் மூடி முடக்கப்பட்டமையினால் பல இலட்சக் கணக்கான பொருள்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளன. மரக்கறிகள் எல்லாம் பழுதாகி விடும் நிலையில் உள்ளன. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதி தருமாறு  பொலிஸாரிடம் கோரிய போதிலும் அவர்கள் அனுமதி வழங்க வில்லை. இந்நகரில் அக்குறணை வர்த்தகர்கள் மட்டுமல்ல அப்பிரதேசத்திலுள்ள சகல முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் பெரும் நெருக்கடியான நிலையொன்றை எதிர் நோக்கியுள்ளனர். 

அது மட்டுமல்ல வேறு வகையிலான நோய்க்குள்ளான அக்குறணை வாசிகளை தனியார் வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிப்பதைக் கூட தவிர்த்து வருகின்றனர். இது ஒரு துரதிருஷ்டமான நிலையாகும். அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி எமது பிரதேசத்தையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு எமது பிரதேசத்திலுள்ள சகல மக்களுடைய பொறுப்பும் கடமையுமாகும். 

எனினும் யார் யாரை இந்த வைரஸ் அடுத்து  தாக்கும்  என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசாங்கம்  ஊரடங்கைப் பிறப்பித்து மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி நாட்டை முடக்கி ஒரு  கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு கடுமையான பிரயத்தனம் செய்து வருகின்றனர்.  

எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கெக்கிராவை கதுருவளை, இன்னும் சில நகரங்களிலுள்ள  வர்த்தக நிலையங்களை மூடி முடக்கப்படும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஊடாகவும் அவரது ஆலோசகர் ஊடாகவும் ஜனாதிபதியின் கவனத்திற் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS